புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் சோதனை - 100 சவரன் நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கரின் வீட்டில் சுமார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 13 மணி நேரம் சோதனை நடத்தினர்.

Update: 2022-02-05 06:01 GMT
தஞ்சை,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள அவரது வீட்டில் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான ஆய்வாளர்கள் மற்றும் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில், கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், வாகனங்கள், வீடு மற்றும் பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரது வீட்டில் இருந்து 100 சவரன் தங்க நகையை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்