அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்.

Update: 2022-02-04 22:17 GMT
சென்னை,

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

7-ந் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகாசி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். 8-ந்தேதி மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் பிரசாரம் செய்கிறார்.

10-ந் தேதி வேலூர், காஞ்சீபுரம், தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 11-ந்தேதி வடசென்னை, தென் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

14-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். 15-ந்தேதி கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்