நீட் விவகாரம் - தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவீதத்தை 10% ஆக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-04 04:43 GMT
சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவனர்  நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் ஜனாதிபதியை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவீதத்தை 10%ஆக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு என்பதே மாணவர்களுக்கு முழு பயனை தரும் என்றார்.

மேலும் செய்திகள்