‘‘அ.தி.மு.க. விரைவில் என் கைக்கு வரும்’’ சசிகலா பரபரப்பு பேச்சு
‘‘அ.தி.மு.க. விரைவில் எனது கைக்கு வரும்’’, என்றும், ‘‘தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம்’’ என்றும் சசிகலா பேசியுள்ளார்.
சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுதினத்தையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவின் தொண்டர்கள் நிச்சயம் இந்த தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெறுவார்கள். அ.தி.மு.க. நிச்சயம் விரைவில் எங்கள் கைக்கு வரும். அது விரைவில் நடக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் நாங்கள் கொண்டுவருவோம்.
விரைவில் சுற்றுப்பயணம்
விரைவில் மக்களை சந்திக்க இருக்கிறேன். கொரோனா காலகட்டம் என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்டது. இதெல்லாம் முடிந்தபிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.