பழுதான வாகனத்தை தள்ளிய அதிகாரிகள்

டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனம் பழுதடைந்ததால் அதிகாரிகள் அதனை தள்ளினர்

Update: 2022-02-03 18:20 GMT
புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடமாடும் டெங்கு மற்றும் சிக்குன் குனியா விழிப்புணர்வு வாகன பிரசாரம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களில் 30 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் ரகுநாதன், முரளி, ராஜாம்பாள், அனந்தலட்சுமி, உதவி இயக்குனர் பக்கா வெங்கடேஸ்வரலு, வசந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கிய நிலையிலேயே அந்த வாகனம் பழுது காரணமாக ஸ்டார்ட் ஆகாமல் இருந்தது. இதனால் அதிகாரிகள் தவித்தனர். பின்னர் சுகாதார ஊழியர்கள் அந்த வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்