கவர்னர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை சந்திக்கிறார்.;
சென்னை,
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னருக்கு அண்ணாமலை நன்றி தெரிவிக்கிறார்.