அண்ணாவின் 53-வது நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-02-03 04:22 GMT
சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக கட்சியை நிறுவியவரும் இவரே ஆவார்.

இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினைத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் செய்திகள்