வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-02 12:33 GMT
கோப்புப்படம்
செங்கல்பட்டு, 

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒருமாதமாக சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. ,

இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் கடந்த 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நாளை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் மாநகராட்சி தளா்த்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்