மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சூழலில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது, தேர்தல் பிரசாரம், பேரணிகள், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.