தெருநாய்களுக்கு கருத்தடை செய்யக்கோரி வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யக்கோரி வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை,
திருச்சியை சேர்ந்த கண்ணையன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே கண்காணிப்பு குழுவின் கீழ் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக கால்நடைத்துறை செயலாளர் மற்றும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.