ஐரோப்பிய கவுன்சிலின் 'ரவுல் வாலன்பெர்க்' விருது பெறும் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐரோப்பிய கவுன்சிலின் 'ரவுல் வாலன்பெர்க்' விருது பெறும் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்;

Update:2022-01-19 15:40 IST
சென்னை,

ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக , சிறந்த பணிக்காகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு எவிடென்ஸ் கதிருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“பட்டியல் - பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்' கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புறத் தொடர வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்