நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் எரித்துக்கொலை

நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.;

Update:2022-01-16 03:46 IST
நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளர். இவருடைய மனைவி அனுசியா(36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு வாசலில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்