பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி,
பழனி முருகன் கோவிலில் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக கொடிபடம், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொரோனா பரவலை அடுத்து தைப்பூசம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பழனியில் பக்தர்கள் இன்றி தைப்பூசத் திருவிழா நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.