காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-09 16:21 GMT
சென்னை, 

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ஆலோசனைபடி தனிமைபடுத்திக்கொண்டுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருநாவுக்கரசரின் மகனும், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்