மதுரையில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் மோடி பொங்கல்

மதுரையில் மோடி பொங்கல் என்ற தலைப்பில் பா.ஜ.க. நடத்தும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Update: 2021-12-31 06:25 GMT

மதுரை,

மதுரையில் வருகிற ஜனவரி 12ந்தேதி பா.ஜ.க. சார்பில் மோடி பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடத்தப்பட உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.  இந்த விழாவானது மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.  இதற்காக மாநில அளவில் குழு அமைத்து செயல்படும்படி தமிழக பா.ஜ.க. தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்