கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க , பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 31) இரவில் உணவகங்கள் ,கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி இல்லை என கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது