ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை - முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறியுள்ளார்.
விருதுநகர்,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் மதுரை சரக டி.ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறியதாவது:-
“ராஜேந்திரபாலாஜி மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை; அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பார்.”
இவ்வாறு அவர் கூறினார்.