புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை - அமைச்சர் சேகர்பாபு
புத்தாண்டையொட்டி பக்தர்கள் நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம், காமாட்சி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து இன்று இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் ஆய்வுநடத்திய பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சிபுரம் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக 2 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தங்கத் தேர் புதிதாக செய்யும் பணி குறித்து முதல்- அமைச்சர் தலைமையில் ஆலோசனை செய்யப்படும்.
திருக்கோயில்கலில் இருந்து வரும் வருமானம் அந்தந்த கோவிலுக்கு வழங்கப்படும், அவர்கள் அதை பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும், திருப்பணிகள் மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் உள்ள 551 கோயில்களில் திருப்பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
வருகின்ற புத்தாண்டு அன்று அனைத்து கோயில்களும் இரவு நேரத்தில் திறந்திருக்கும் . பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் .
புத்தாண்டு கொண்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடையில்லை.
மேலும் அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு முறைகளான தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் கட்டயாம் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு கோயில்களில் சாமி தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறினார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் மற்றும் மேம்பாடு பணிகள் குறித்து இன்று (30.12.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். உடன் மா.செயலாளர் திரு.@ksundarmla, திரு.குமரகுருபரன். pic.twitter.com/AuVWTy4zy4
— P.K. Sekar Babu (@PKSekarbabu) December 30, 2021