பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-04 10:06 GMT

சென்னை,

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4.12 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைகோளில் ஏற்பட்ட கோளாறை செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்