நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை புனித கேத்ரின் தேவாலய தேர்பவனி திருவிழா -வீடியோ
நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை புனித கேத்ரின் தேவாலயத்தில் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொல்லங்கோடு:
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரீன் தேவாலயm உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா கடந்த 23 ம் தேதி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
விழாவின் 6 ம் திருவிழாவான நேற்று ஆலயத்தில் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பவனியின் போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரீன் சொரூபம் வைக்கப்பட்டு அதனை ஆலய பங்கு தந்தை ஜெரோம் அமிர்தைய்யன் அர்ச்சிப்பு செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஊர்மக்கள் ஒன்றிணைந்து தேரை கோவில் வளாகத்தில் இருந்து தோளில் சுமந்தபடி 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊர் முழுவதும் சுற்றி வந்தனர். இந்த பவனியில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தேரின் முன்னால் ஜெபமாலை பாடியபடி வரிசையாக சென்றனர்.
ஊர்முழுவதும் சுற்றி வந்த தேர் மீண்டும் தேவாலயம் கொண்டுவரப்பட்டு அங்கு மக்கள் அனைவரும் புனித கேத்ரீனா சொரூபத்தின் கால்களை தொட்டு வணங்கியபடி சென்றனர்.