10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதத்தில் பொதுத்தேர்வு அமைச்சர் பேட்டி
ஏப்ரல், மே மாதத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை,
பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத, சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் சமீபகாலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபற்றியும், கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
1,600 பள்ளிகளில் பழைய கட்டிடங்கள்
பாலியல் துன்புறுத்தல்கள், பழைய கட்டிடங்கள் இடிப்பது போன்ற விஷயங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையின்படி ஆயிரத்து 600 பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருப்பது முதல்கட்டமாக கண்டறியப்பட்டு, இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 14417 எண்ணை பள்ளி வளாகங்களில் அனைத்து இடங்களிலும் தெரியும்படி வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியும் வைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
ஏப்ரல், மே மாதத்தில் பொதுத்தேர்வு
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3-வது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டுவிடும். அது முடிந்தபிறகு, மார்ச் மாதத்தில் 2-வது திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதத்திலோ பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
கட்டிடங்களை ஆய்வு செய்யும்போது அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் நெல்லையில் நடந்த சம்பவங்கள் போல் நடக்காது. பழைய கட்டிடங்கள் இருக்கிறது என அனைத்து கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பிள்ளைகளை அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறை இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. அதனையும் கருத்தில்கொண்டு இடிக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம்.
கல்வித்துறையில் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி தேவை என்று முதல்-அமைச்சரிடம் கேட்டு இருக்கிறோம். கண்டிப்பாக அவர் வழங்குவார். அதை வைத்து கட்டிடங்களை கட்டும் வேலைகளை செய்வோம். இந்த ஆண்டு இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தள்ளிவைக்கப்படுமா?
ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நிலையில், குழந்தைகளின் உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம். வருகிற 3-ந் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்குமான நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்பு தள்ளிவைக்கப்படும்.
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அதுவரையில் இத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.