தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும், 10-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.