சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

பஸ் டிரைவரை தாக்கும் வீடியோ கேரளாவில் நடந்த சம்பவம்: சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை.

Update: 2021-12-27 18:57 GMT
சென்னை,

பஸ் டிரைவரை தாக்கும் வீடியோ, கேரளாவில் நடந்த சம்பவம். அதை தமிழகத்தில் நடந்த சம்பவம் போல தவறாக சித்தரிக்கப்படுகிறது. இதுபோல் தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-

சமூகவலைதளங்களில் பரவி வரும், பஸ் டிரைவர் ஒருவர் தாக்கப்படும் சம்பவம் பற்றிய வீடியோவானது, 2018-ம் ஆண்டு கேரள மாநிலம் மணக்காடு பகுதியில் நடந்த சம்பவம் ஆகும். இந்த வீடியோவை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் போன்று சித்தரித்து, அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறான செய்தியை வேண்டுமென்று பரப்பும், சமூகவிரோதிகள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்