கோவையில் லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்த சம்பவம்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
கோவையில் லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்த சம்பவம் இந்த விபத்து அங்கு ருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 20 பயணிகள் பயணம் செய்தனர்.
கோவையில் லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்த சம்பவம்..!!https://t.co/YmG4uPDl69#Lorry #Bus #Accident #Coimbatore #ViralVideo #CCTV #dailythanthi #dt pic.twitter.com/WBgvj9NVZW
— DailyThanthi (@dinathanthi) December 27, 2021
அப்போது அந்த பஸ், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியில், அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருப்பதும், அதற்கு முன்பு வலதுபுறம் மற்றொரு சாலையிலிருந்து ஒரு லாரி திரும்பி செல்வதும், அந்த லாரியை பின் தொடர்ந்து மற்றொரு லாரியானது வேகமாக வந்து அரசு பஸ் மீது மோதுவதும், மோதிய வேகத்தில் அந்த அரசு பஸ் ஆனது இடதுபுறமாக சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் வழிகாட்டி பலகை மீது கவிழ்ந்து விழுந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த விபத்து நடப்பதற்கு முன்பு வெள்ளை நிற கார் ஒன்று விபத்தில் சிக்காமல் நொடிப்பொழுதில் தப்பித்ததும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.