கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மகன் கொலை; தந்தை வெறிச்செயல்

தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-12-27 05:33 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரம் 12-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அப்துல்ரகுமான்( வயது27).

அப்துல்ரகுமான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை அவருடைய தந்தை அப்துல்லா கண்டித்துள்ளார்.இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அப்துல்ரகுமான் தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கிரைண்டர் மாவரைக்கும் கல்லை எடுத்து மகன் அப்துல்ரகுமான் மீது போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்துல் ரகுமான் உடலை  பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்