தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான்
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
சென்னை,
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் ஒமைக்ரான் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
300-ஐ தாண்டியது
இந்தியாவை பொறுத்தவரை இந்த வகை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தது. இப்போது மேலும் 33 பேருக்கு இந்த வகை தொற்று உறுதியாகி இருக்கிறது.
15,259 பேருக்கு பரிசோதனை
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நல்வாழ்வு குழுமத்தில் முன்களப்பணியாளர்களுக்கு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் 12 ஆயிரம் உடல் வெப்ப பரிசோதனை கருவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1 லட்சத்து 950 பேரில் 2 சதவீதம் அடிப்படையில் உத்தேசமாக 2 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் வந்த 15 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
அந்தவகையில் மொத்தம் 18 ஆயிரத்து 129 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்த போது, அதில் 57 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருந்தாலும், 114 பேரின் மாதிரிகளை மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஏற்கனவே ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 60 பேரின் மாதிரி முடிவுகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
கேரளாவை சேர்ந்தவர்
மற்ற 3 பேர் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் (கிளஸ்டர் பகுதி) உறுதி செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர்.
அந்தவகையில் தமிழகத்தில் மொத்தம் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்னும் 23 பேரின் பரிசோதனை மாதிரி முடிவுகள் விரைவில் வரும்.
தீவிர கண்காணிப்பு
இதுவரை ஒமைக்ரான் அறிகுறி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 4 ஆயிரத்து 835 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விமானங்களில் வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் யாரும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில் சென்னையில் 26 பேரும், சேலத்தில் ஒருவரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேரும், கேரளாவை சேர்ந்த ஒருவரும் ஆவர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட 114 பேரில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் 79 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 12 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே நாளில் 3 பேர் ‘டிஸ்சார்ஜ்’
சென்னை கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்தவர் உள்பட மொத்தம் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த நபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று (நேற்று) மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கும், அவரது சகோதரி மற்றும் சகோதரியின் மகள் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.
அவர்கள் இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வெளியில் நடமாடாமல், வீட்டுக்குள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் 4 பேர் நாளை (இன்று) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
31 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அந்தவகையில் தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31-ஆக குறைந்துள்ளது. நாளை (இன்று) தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஒமைக்ரான் தொற்று தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 84.63 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.4 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தலா 40 சதவீதம் பேரும், தென்காசி, தேனி, மயிலாடுதுறையில் தலா 42 சதவீதம் பேரும், நெல்லையில் 45 சதவீதம் பேரும், மதுரையில் 47 சதவீதம், தஞ்சாவூரில் 47.4 சதவீதம் பேரும் என 2-வது தவணை தடுப்பூசியை குறைந்த அளவில் செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் 93 சதவீதம் பேர் 2-வது தவணை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் வருகிற 16-வது மற்றும் 17-வது முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து நிருபர்களிடம் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘ஒமைக்ரான் தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள் என்றும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரையும் பரிசோதனை செய்து வீட்டு தனிமை செய்ய வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். மத்திய அரசை பொறுத்தவரை, ஏதாவது ஒரு மாவட்டத்தில் 10 சதவீதத்துக்கு மேல் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்’ என்றார்.