"பள்ளிகளுக்கு ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை" - அறிவிப்பு

வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.;

Update: 2021-12-23 09:49 GMT
நெல்லை,

நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- 

தமிழகத்தில் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.  நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு. பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் பஸ்  படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க  கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்