இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி' திரைப்படத்தை வெளியிட இணையதளங்களுக்கு தடை
இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி' திரைப்படத்தை வெளியிட இணையதளங்களுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.மனோஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராக்கி என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இதில், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகன், கதாநாயகியாக வசந்த் ரவி, ரீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். பெரும் தொகை செலவிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமம் அனைத்தும் என்னிடம் உள்ளது.
ஆனால், சில தனியார் இணையதளங்கள், திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றன. எனவே, என்னுடைய திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட இந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, எந்த ஒரு புதிய திரைப்படம் வெளியானாலும், அதை திருட்டுத்தனமாக இணையதளங்கள் வெளியிட்டு, தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன என்று வாதிட்டார். இதையடுத்து ராக்கி திரைப்படத்தை வெளியிட தனியார் இணையதளங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.