சண்முகநாதன் இறுதி ஊர்வலகத்தில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-12-22 04:44 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் முதல-அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சண்முகநாதன் மீது அதீத பாசத்தால், இரண்டாவது முறையாக நேற்றிரவு மீண்டு அவரின் உடலுக்கு  முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அஞ்சலி செலுத்திய நிலையில், இரவில் மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில்  சண்முகநாதன் மறைந்ததை அடுத்து அவரது இறுதி ஊர்வலத்தில்  முக ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இன்று பிற்பகல் 12 மணியளவில் சண்முகநாதன் உடலுக்கு மயிலாப்பூர் இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்