இரு நாட்டு கடல் பகுதியில் முறைவைத்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்
இரு நாட்டு கடல் பகுதியில் முறைவைத்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. சிங்களப்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியதாகும். பல நாடுகளுக்கு இடையில் உள்ளது போன்ற வரையறுக்கப்பட்ட சர்வதேச கடல் எல்லை இந்த பகுதியில் கிடையாது. அதனால் மீன்வளத்தை தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதும் இயல்பான ஒன்று தான்.
இரு நாட்டு கடல் பகுதிகளில் தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிக்க அனுமதிப்பதுதான் நியாயமான, சாத்தியமான தீர்வாக இருக்கும்.
இதுகுறித்து விவாதிப்பதற்காக இருநாட்டு அரசுகளின் வழிகாட்டுதலில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றுவந்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுகளுக்கு பின்னர் அடுத்தகட்ட பேச்சுகள் நடத்தப்படவில்லை.
உடனடியாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும். அத்துடன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வுகாண இருதரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.