கேராளவுக்கு சென்ற அரசு பஸ்சில் ரூ. 70-லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு

பறிமுதல் செய்யப்பட்ட பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது ஹவால பணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனனர்.

Update: 2021-12-20 11:36 GMT
களியக்காவிளை, 

நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் கேரளா மதுவிலக்கு மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு போலீஸ்சார் களியக்காவிளையை அடுத்த படந்தாலூ மூட்டில் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலிருந்து கேரளா சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வாகன சோதனை செய்தனர்.

அப்போது பேக்குகளில் ரூ.70 லட்சம்  பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் சென்னை புதுப்பேட்டை லெப்பை தெருவை சேர்ந்த கல்லுமொய்தின் என்பவரது மகன் ஆதாம்(45) என்பது தெரிய வந்தது .

பணத்தைபறிமுதல் செய்த போலீசார் ஆதாமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கேராளாவில் நேற்று இண்டு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்