ஓரகடத்தில் மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் கைது
ஓரகடத்தில் மறியலில் ஈடுபட்ட பாக்ஸ்கான் ஆலை தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ஓரடகத்தில் பாக்ஸ்கான் ஆலை தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிடாமல் போராட்டத்தை தொடர்ந்ததால் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை போலீசார் அப்புறப்படுத்தினர். சுங்குவார் சத்திரத்தில் நடந்த மறியல் கைவிடப்பட்ட நிலையில் ஓரகடத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்ததால் தொழிலாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாக்ஸ்கான் தொழிலாளர்கள் விடுதியில் தரமான உணவு வழங்க கோரி பல மணி நேரம் போராட்டம் நடத்தினர்.