தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்புள்ளதா? அண்ணாமலை பதில்
தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்புள்ளதா? என்பது பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலளித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகின்றது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி இருக்கும் வேளையில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணிக்கு வாய்ப்பேயில்லை என்று தெரிவித்துள்ளார்.