தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக பயன்படுத்த வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-12-17 15:12 GMT
சென்னை, 

பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. முதலில் பா.ஜ.க. தமிழ்த்தாய் வாழ்த்துக்கான அரசின் அங்கீகாரத்தை மிகவும் வரவேற்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் என்று போற்றப்படும் திருவனந்தபுரம் பெருமாள் சுந்தரம் பிள்ளை இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அப்பாடலை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாமல், அதில் சில வரிகளை நீக்கி, திருத்திப் பயன்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்கவேமாட்டார்.

சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளைச் சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்துவதே, அப்பாடலை எழுதிய சுந்தரனாருக்கும், நம் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்