பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம் வரவேற்கத்தக்கது - மக்கள் நீதி மய்யம்
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு அளித்துள்ளது.
சென்னை,
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், 'பெண்களின் திருமண வயதை " 21ஆக " உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் திருமண வயதை
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 16, 2021
" 21ஆக " உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்.