திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

8 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-17 00:28 GMT
கன்னியாகுமரி,

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 8 மாதமாக, குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியிதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் திற்பரப்பு அருவியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அருவியில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அருவி பகுதியில் பாசி பிடித்து வழுக்கும் நிலையில் இருந்த இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கலாம் என்றும் அங்குள்ள கடைகளில் சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் திற்பரப்பு அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கும், திற்பரப்பில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்