முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணம் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்

முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணம் தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

Update: 2021-12-16 19:55 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது நஞ்சுண்டு உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

காவல்துறை அமைச்சகத்தை தன்வசம் கொண்டிருக்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை இச்சம்பவம் குறித்து வாய் திறக்காது அமைதியை கடைப்பிடிப்பதேன்? குறைந்தது, இறந்துபோன மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கக்கூட முதல்-அமைச்சரை தடுப்பது எது?.

ஆகவே, காவல்துறையினர் மீதே சந்தேகம் எழுகிற இச்சூழலில் அவர்களை கொண்டே இவ்வழக்கை நடத்தி முடிப்பது முறையானதாக இருக்காது. எனவே, மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்திய குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், மாணவர் மணிகண்டன் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்