திருச்செந்தூர் - பாலக்காடு இடையிலான ரயில்சேவை மீண்டும் தொடங்கியது

கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் எதுவும் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படவில்லை.

Update: 2021-12-16 13:18 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் - பாலக்காடு இடையிலான ரயில்சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் எதுவும் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படவில்லை.தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் விரைவு ரயிலானது இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் வழியில் இந்த ரயிலானது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி வழியே செல்லும். எனவே இந்த ரயில் மூலம் தென்தமிழகத்தில் இருந்து பல பக்தர்கள் பழனி சென்று வந்தனர். மீண்டும் ரயில் இயக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்