தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரி தேவை - செந்தில்பாலாஜி கோரிக்கை

தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என டெல்லி மத்திய மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங்கை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2021-12-16 09:50 GMT
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய மின்சாரத்துறை மந்திரி  ஆர்.கே.சிங்குடன் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்தார்.  சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 

அந்த மனுவில், 

மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகதிற்கு தினமும் 10,000 டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும், மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50% ஆக நிர்ணயிக்க வேண்டும். 

ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி தங்கமணி மட்டும் தான்.  வடசென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் நிலக்கரி காணாமல் போயுள்ளது என்றார். 

மேலும் செய்திகள்