ஒமைக்ரான் பரவல்: 6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

Update: 2021-12-16 06:21 GMT
சென்னை,

தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் தினசரி வகுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், 6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம். தமிழகத்திற்க்குள் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டி.ச 25-ல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வுகள் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்