அன்னவாசலில் வாக்காளர்கள் பெயர்கள் இந்தியில் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை
வாக்காளர்கள் பெயர்கள் இந்தியில் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.;
அன்னவாசல்:
ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பேரூராட்சி வார்டு எண் 5-ல் புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 69-ல் பழைய பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் தாயுமானவன் என்பவரது மகன் பெயர் இந்தியிலும், அதே வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 106-ல் ஹாஜிராபேகம் என்பவரது கணவர் பெயர் இந்தியிலும் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர் இடம் பெற்றிருப்பது வாக்காளர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால் இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.