ராகிங்கில் ஈடுபட மாட்டேன் - மாணவர்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு..!!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று மாணவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-14 11:33 GMT
சென்னை, 

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று மாணவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப்படி ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருக்கிறது. 

இதன்படி www.antiragging.in அல்லது www.amanmovement.org என்ற இணையதளத்தில் மாணவர், பெற்றோர் / பாதுகாவலர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை பதிவு செய்து வரும் மின்னஞ்சலை கல்லூரி சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்