தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 657 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-13 14:28 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,36,046 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 26,91,756 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 702 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 12 பேர் உயிரிழந்தனர் (அரசு மருத்துவமனை - 7, தனியார் மருத்துவமனை - 5). இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,624 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,59,581 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று மேலும் 101 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 5,55,96,111 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,00,085 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,46,60,522 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 99,851 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 7,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 15,97,039 பேர் ஆண்கள் (இன்று-382 பேர்), 11,38,969 பேர் பெண்கள் (இன்று-275 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்