கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
மகளுடன் ஏற்பட்ட பணத்தகராறில் விரக்தி அடைந்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொளத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் பாரதி நகர் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி பாரதி (59). இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், பாக்யலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
பெற்றோருடன் வசித்து வந்த தினேஷ், கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தரகராக வேலை செய்து வருகிறார். பாக்யலட்சுமிக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி குடும்பத்துடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார்.
விஷம் குடித்து தற்கொலை
பாக்யலட்சுமி தனது மகளை, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக கடந்த வாரம் குடும்பத்துடன் தந்தை கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். மகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு பாக்யலட்சுமி, தனது பெற்றோரிடம் பணம் கேட்டார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சென்று தூங்கி விட்டனர். இதனால் விரக்தி அடைந்த கோவிந்தராஜ், அவருடைய மனைவி பாரதி இருவரும் தங்கள் அறையில் நள்ளிரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
போலீஸ் விசாரணை
நேற்று காலையில் எழுந்த பாக்யலட்சுமியின் கணவர் பிரகாஷ், தனது மாமனார்-மாமியார் இருவரும் படுக்கை அறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொளத்தூர் போலீசார் கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.