வேலூரில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் நாளை முதல் இயக்கம்
வேலூரில் இருந்து பம்பைக்கு செல்ல 16 மணி நேரம் ஆகிறது. பஸ் கட்டணமாக ரூ.1,010 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.;
வேலூர்,
அய்யப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பம்பைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் சொகுசு பஸ் இயக்கப்படுகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ் தினமும் பகல் 2 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், குமுளி, எருமேலி வழியாக பம்பைக்கு செல்கிறது.
வேலூரில் இருந்து பம்பைக்கு செல்ல 16 மணி நேரம் ஆகிறது. பஸ் கட்டணமாக ரூ.1,010 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 16-ந்தேதி வரை இயக்கப்படும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து வேலூர் வர விரும்பும் பக்தர்களுக்காக நிலக்கல்லில் இருந்து மீண்டும் பஸ் இயக்கப்படுகிறது.
இந்த வசதியினை அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலூர் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.