ரெயிலில் அடிபட்டு யானைகள் இறந்த விவகாரம் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
ரெயிலில் அடிபட்டு யானைகள் இறந்தது தொடர்பாக மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் உயிரிழப்பை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சென்னை,
யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், இதுபோன்ற குற்றச்செயல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்ய சவுமியா உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்து இருந்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் மேகமலையில் கடந்த 2018-ம் ஆண்டு 7 யானைகள் பலியானது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகும் யானைகள் பலியாவது குறையவில்லை.
விசாரணைக்கு உத்தரவு
நாளிதழ்களில் வந்த புள்ளிவிவரங்களின்படி, 2018-ம் ஆண்டு நாடு முழுவதும் 84 யானைகளும், 2019-ம் ஆண்டு 108 யானைகளும், 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 61 யானைகளும் பலியாகியுள்ளன. யானைகள் தந்தத்துக்காகவும், பிற வன விலங்குகள் மற்ற தேவைகளுக்காகவும் கொடூரமாக வேட்டையாடப்பட்டு விலை மதிப்பற்ற பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ. அதிகாரிகளும் இணைந்து இந்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அழிந்து வருகிறது
இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், கடந்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்று கூறினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்தியாவில் அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில்தான் யானைகள் அதிகளவில் உள்ளன. ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் ரெயில்களில் அடிபட்டு யானைகள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரம் யானைகள்தான் இருந்தது. தற்போது அவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன” என்று கவலை தெரிவித்தனர்.
கவலை இல்லை
அப்போது மூத்த வக்கீல் பி.எச்.அர்விந்த் பாண்டியன், “இந்தியாவில் கடந்த 3 ஆண்டு களில் 61 யானைகள் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளது என்று மத்திய தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “யானைகள் இறப்பு தொடர்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டுமே பெறப்படுகிறது. அந்த பரிந்துரைகளும் அரசு அலுவலகங்களில் காகித அளவில் மட்டுமே உள்ளது. இந்த நாட்டின் சொத்துகளான யானைகள் இறப்பு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை என்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும். ரெயில்கள் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ரெயிலின் ஓட்டுநர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என்று கருத்து தெரிவித்தனர்.
வாகன சேவை நிறுத்தம்?
மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “யானைகள் கடந்து செல்லும் ரெயில் வழித்தடங்களில் 45 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதைகளில் 5 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்கினாலும், யானைகள் மீது ரெயில் மோதினால், அவை பலியாகத்தான் செய்யும். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்றார்.
“அப்படியென்றால், இரவில்தான் வனவிலங்குகள் அதிக அளவில் சாலைகளை, ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றன. எனவே, இதுபோன்ற பகுதிகளில் இரவு வாகன சேவையை நிறுத்தினால் என்ன? அல்லது அப்பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்து வாகனங்களை இயக்கினால் என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடுமையான நடவடிக்கை
பின்னர் நீதிபதிகள், “ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாகும் விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்படும். மேலும், ரெயில்வே சொத்துகளை பாதுகாக்க தடுப்புசுவர்களை ரெயில்வே நிர்வாகம் எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுகிறது. யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை?” என்று வேதனைப்பட்டனர்.
இதைதொடர்ந்து, “ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.