கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.