ராணுவ அதிகாரிகளுக்கு பிரியா விடை அளித்து "வீர வணக்கம்" என கூறி முழக்கமிட்ட பொதுமக்கள்!

தாய் மண்ணிற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு வழி நெடுக மலர்தூவியும் , வீர வணக்கம் கூறியும் தமிழக மக்கள் தங்களது மரியாதையை செலுத்தினர்.

Update: 2021-12-09 10:25 GMT
நீலகிரி,

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றது.

இன்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் அஞ்சலிக்கு பிறகு தனி தனி ஆம்பூலன்ஸில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது 13 பேரின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டது.

உடல்களை கொண்டு செல்லும் வழிநெடுகிலும் மக்கள் பூக்களை தூவி வீரர்களுக்கு பிரியா விடை அளித்தனர். வீரவணக்கம் செலுத்தியும் மலர்களை தூவியும், கைகளை கூப்பியும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்