பிபின்ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு: நீலகிரி மாவட்டத்தில் நாளை கடைகள் அடைப்பு

பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன.

Update: 2021-12-09 10:05 GMT
கோப்பு படம்
நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உலக நாடுகளின் தலைவர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்,

இந்த நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  நீலகிரி மாவட்டத்தில்  நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. நாளை  (10-ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும்.

உதகமண்டலத்தில் நாளை காளை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்