ஹெலிகாப்டர் விமான விபத்து: விமானப்படை தளபதி நேரில் ஆய்வு

நீலகிரி குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானப்படை தளபதி சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-09 03:22 GMT
நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. 

இந்தநிலையில்  குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.செளத்ரி, உயரதிகாரி ஜோஷி ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  இராணுவ உயரதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  விமானப்படை ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த பகுதியிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதியுடன் டிஜிபி சைலேந்திரபாபுவும் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

மேலும் செய்திகள்